தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
வெளிநாடு வாழ் இலங்கை அமைப்புக்களே இவ்வாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளார் செயிட் ராட் அல் ஹூசைனிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றது.
இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை மீறும் வகையில் கூட்டமைப்பின் இந்த செயற்பாடுகள் அமைகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகள் நல்லிணக்க பொறிமுறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதுதொடர்பிலேயே ஆணையாளருக்கு முறையிடவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.