‘ஐஸ்’ என்று சொல்லப்படும் போதை மருந்தைக் கடத்திவந்த சென்னைவாசிகள் இருவரை கொழும்பு விமான நிலைய போதை தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து இன்று காலை இலங்கை வந்தடைந்த விமானத்தில் குறித்த இருவரும் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவரை சோதனையிட்ட பொலிஸார், அவரது சட்டையின் உட்புறத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிராம் ஐஸ் போதை மருந்தைக் கைப்பற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், குறித்த போதை மருந்தை தனக்குத் தந்தவர் என்று மற்றொருவரை அடையாளம் காட்டியுள்ளார். அவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்து 10 கிராம் போதை மருந்தைக் கைப்பற்றினர்.
இருவரும் தற்போது மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.