பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளது!

335 0

நாட்டின் பொதுச் சட்ட விதிகள் குறித்த அறிவை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில், பாடசாலைகளில் சட்டக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘குழந்தைகளைக் காப்போம்’ என்ற தேசிய திட்டத்தின் கீழ், பொலனறுவை ரோயல் கல்லூரியில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குழந்தைகளின் உடல்வள, உளவள அபிவிருத்திக்கு ஏற்ற ஒரு சூழலைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment