பொலிஸ் – சந்தேக நபர்களிடையே துப்பாக்கிச் சண்டை; ஒருவர் பலி

524 0

கொக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாந்தோட்டை, கொக்கலையில் நேற்று இரவு பொலிஸாருக்கும் லொறியில் சென்ற சிலருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

என்ன காரணத்துக்காக இந்த பரஸ்பரத் தாக்குதல் இடம்பெற்றது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. எனினும், கால்நடை கடத்தலை முறியடிக்கவே சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment