தேர்தல் திகதி அறிவிப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று

428 0

உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் போது வௌியிட முடியும் என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி கூறியுள்ளார். 

தேர்தலை நடத்துவது சம்பந்தமான 2043/57 என்ற வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறிய அவர், இன்று (11) இரவு அல்லது நாளை காலையாகும் அதனை வௌியிட முடியும் என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி ஒன்றை தீர்மானிப்பதற்கு குறித்த 2043/57 என்ற வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவது கட்டாயமாகும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும்.

Leave a comment