23 இலட்சம் பெறுமதியுடைய தங்க நகைகளை திருடிய ஏழ்வர் கைது

381 0

நவகமுவ, நகடமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க ஆபரணங்களை திருடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வீடொன்றுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதுடன், சுமார் 08 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேன்பிந்துனுவெவ, கடுவல மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

இதுதவிர அச்சுவேலி, கைத்தொழில் பேட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 15 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய அச்சுவேலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a comment