விஞ்ஞான ஆய்வு கூடம் இல்லாத 3,000 பாடசாலைகளுக்கு ‘நடமாடும் ஆய்வுகூட’ வசதி

755 0

மாணவர்கள் குறைவாக காணப்படும் கஷ்ட பிரதேசங்களிலுள்ள 3,000 பாடசாலைகளுக்கு “நடமாடும் விஞ்ஞான உபகரணங்கள்” வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

எதிர்வரும் 5 வருடங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இரசாயன பொருட்கள் இந்த உபகரண தொகுயில் அடங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தில் 448 பாடசாலைகளுக்கும், மத்திய மாகாணத்தில் 440 பாடசாலைகளுக்கும், தென் மாகாணத்தில் 306 பாடசாலைகளுக்கும், வட மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் 322 பாடசாலைகளுக்கும், வட மேல் மாகாணத்தில் 403 பாடசாலைகளுக்கும், வட மத்திய மாகாணத்தில் 173 பாடசாலைகளுக்கும், ஊவா மாகாணத்தில் 249 பாடசாலைகளுக்கும், சப்ரகமுவ மாகாணத்தில் 410 பாடசாலைகளுக்கும் இந்த உபகரண தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 450 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குருதிப்பிடத்தக்கது.

Leave a comment