சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மலேசிய நாட்டவர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 கோடியே 23 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 208,000 அமெரிக்க டொலரை கடத்த முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மலேசிய, கோலாலம்பூர் நோக்கி புறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.