ஜேர்மனியில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்தமைக்காக தண்டனை அனுபவித்து வரும் தாதி ஒருவர், 100 பேர் வரையில் அவ்வாறு மரணிக்கச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஜேர்மன் விசாரணையாளர்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இரண்டு நோயாளர்களை இவ்வாறு மரணிக்க செய்தமைக்காக, நீல்ஸ் ஹோகெல் என்ற தாதி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் கடமையாற்றிய 2 வைத்தியசாலைகளில் 100 பேர் வரையில் அவர் இவ்வாறு கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.