அம்பலாந்தொட்ட – இடம்தொட்ட பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் இருந்து ஒன்றரை வயதான குழந்தை ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் அம்பலாந்தொட்ட பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒரு பிள்ளையின் தாயார் என கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் தாயார் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது, தமது மகள் அந்த அழைப்புக்கு பதில் அளிக்காத நிலையில் அவர் நேரில் சென்று சோதித்துள்ளார்.
இதன்போது, வீட்டின் படுக்கையறையில் தமது மகள் மரணித்த நிலையில் கிடந்ததாகவும், பேரபிள்ளை தாயாரின் அருகில் உயிருடன் இருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.