வடமராட்சியில் 60 இலட்சம் பெறுமதியான 30 கிலே கேரள கஞ்சா மீட்பு

332 0

photoவடமராட்சி பகுதியில் இருந்து கொடிகாமம் ஊடுhக வெளிமாவட்டத்திற்கு கடத்திச் செல்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவினை பருத்தித்துறை மருவரித்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
வடமராட்சி பகுதியில் இருந்து கொடிகாமம் ஊடாக வெளிடமாவட்டத்திற்கு கேரள கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி குறித்த பகுதிகளில் தோடுதல் நடத்திய அவர்கள் செம்பியன்பற்று மா முனைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மோட்டார் சைக்கிலை அவர்கள் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது 30 கிலோக்கிராம் நிறையுடைய 60 இலட்சம் பெறுமதியனா கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதுடன், கஞ்சா பொதியினை கடத்தியவரையும் கைது செய்துள்ளர்.
குறித்த நபரிடம் நடைபெற்றுவரும் விசாரணைகளின் பின்னர் அவர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளும் மதுவரித்திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.