முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பில் நாளைய தினம் ஆரம்பிக்கவுள்ள நியூ பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிகள் கணினி நிலையத்திற்கு ஒருதொகுதி கணினிகளுக்கான கதிரைகள் வழங்கும் நிகழ்வு 26-08-2016 வெள்ளி மாலை யாழில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிலையம் முல்லைத்தீவு நியூ பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தால் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில்இ ஒருதொகுதி கதிரைகளை 2016 ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்துஇ குறித்த அமைப்பின் தலைவர் அவர்களிடம் கையளித்தார் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்இ குறித்த கணினி நிலயத்தினூடாக பல மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் ஆகியோர் கணினி அறிவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்இ இவ்வாறான மாற்றுவலுவுள்ளோரை வலுவூட்ட என்னாலான சகல உதவிகளையும் செய்வேன் என்று குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் தெரிவித்தார்.