வடகொரியா தமது அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
நீண்ட நாள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவிற்கான தமது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
தமது முதல் பயணமாக அவர் ஜப்பான் சென்றிருந்தார்.
தற்போது அவர் சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கை சந்தித்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இந்தநிலையில், வடகொரியா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், வடகொரியா மேற்கொண்டுவரும் அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனா கோரவேண்டும் எனவும் ட்ரம்ப் கோரியுள்ளார்.