ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு

386 0

201608261142013883_US-ship-fires-warning-shots-at-Iranian-vessel_SECVPFஅரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக சென்ற அமெரிக்க போர்க் கப்பல் மீது ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த கப்பல்கள் படுவேகமாக மோதுவதுபோல் வந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ’யூ.எஸ்.எஸ்.நிட்ஸே’ என்ற போர்க்கப்பல் வந்த பாதை வழியே மிக வேகமாக வந்த ஈரான் நாட்டின் கப்பற்படையை சேர்ந்த 4 கப்பல்களில் இரு கப்பல்கள் ’யூ.எஸ்.எஸ்.நிட்ஸே’ மீது மோதுவதுபோல் வந்த சம்பவத்தை மிக ஆபத்தானதாகவும், தொழில்முறை பாதுகாப்பை மீறிய அச்சுறுத்தலாகவும் கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு, பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு அதிரடிப்படை படகின்மீது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘யூ.எஸ். ஸ்குவால்’ என்ற கண்காணிப்பு கப்பலில் இருந்த வீரர்கள் ’.50 கேலிபர்’ ரக இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.