நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைபெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரித்து வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.