சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபா இந்திய பெறுமதியுடனான ஒருவகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த வானூர்தியிலேயே குறித்த போதைப்பொருளை கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைதானவர் தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் எவ்வாகையானது என்பது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழக அதிகாரிகளை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.