சீனாவின் நாய் இறைச்சி திருவிழா

4874 0

16156531-15C1-4A38-9F94-5C429937240A_L_styvpf (1)சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் நாய் இறைச்சி திருவிழா நடத்தப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த விழாவிற்காக 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும், நாய்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்த ஆண்டுக்கான நாய் இறைச்சி திருவிழா தற்போது தொடங்கி களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த முறை 10,000 நாய்கள் மற்றும் பூனைகள் வரை உணவாக்கப்படும் என கூறப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்காக ஏராளமான நாய்களை இங்கு கொண்டுவந்து சமைத்து உண்பதை சீன மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விழாவினை தடை செய்ய வேண்டி 11 மில்லியன் பேர்  கையெழுத்திட்டு மனுவை உள்ளூர் அரசு நிர்வாகத்திடம் அளித்துள்ளனர். ஆனால் இந்த விழாவானது தனியாரால் நடத்தப்படுவதால் தங்களுக்கு அதில் எதுவும் செய்வதற்கில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாய் இறைச்சி உண்ணும் வழக்கமானது 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனா, தென்கொரியா மற்றும் சில நாடுகளில் உள்ளதாக அதன் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வாட்டும் கோடையில் வெப்பத்தை தணிப்பதற்காக நாய் இறைச்சியை காலங்காலமாக உண்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்த விழாவிற்கு எடுத்துவரப்படும் நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் கூண்டுகளில் அடைத்து விழா நடக்கும் பகுதிக்கு எடுத்து வருவதாகவும், தெருவில் வைத்தே அவற்றைக் கொன்று சமைப்பதாகவும், அல்லது உயிருடன் நெருப்பில் வாட்டி எடுக்கப்படுவதாகவும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் குற்றம்  சாட்டுகின்றனர்.

Leave a comment