ஹப்புத்தளை ஹல்துமுல்ல – தடயம்பெல பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த குடியிருப்பில் இருந்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்து தியதலாவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமானதாக இருப்பதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த சிறுமி 9 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழையின் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் குடியிருப்புக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இறாகம – கல்வலவத்த – கென்தலியத்த பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காயங்களுக்கு உள்ளானவர்கள் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 10.45 அளவில், 30 அடி உயரமான மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 18 வயது யுவதி ஒருவர் மற்றும் 35 வயதான பெண்ணொருவரும் அடங்குகின்றனர்.
காயமடைந்த மற்றையவருக்கு 34 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது.