வடக்கு கிழக்கு மாவட்டங்களே வறுமையில் முன்னிலையில்

357 0

வடக்கு கிழக்கில் உள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமை நிலையில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை வறுமைக்கோட்டுக்குள் இருந்த மொனறாகலை மற்றும் மன்னார் மாவட்டங்கள் அதிலிருந்து விடுபட்டுள்ளன.

அதேவேளை திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் வறுமைப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment