மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அது தொடர்பிலான திட்ட முன்மொழிவுகளுடன் விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மதச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு இலங்கையின் அனைத்து மட்ட அதிகாரிகளும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும், பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவே நாட்டின் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களது சுய விருப்பின் அடிப்படையில் மதமொன்றை தெரிவு செய்வதற்கான உரிமை காணப்படுவதாகவும், இலங்கையில் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.