முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காரியாலயப் பணிப்பாளர் காமினி செனரத் இன்று (9) காலை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து காமினியுடன் மற்றும் இருவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
தற்போது, நிதி மோசடிக் குற்றச்சாட்டு குறித்து காமினி செனரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.