மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் தேர்தலை மையப்படுத்திய பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் நடைபெறும் இக்கூட்டம் தொகுதி வாரியாக 20 கூட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னர் நடாத்தப்படும் பொதுக் கூட்டம் என முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் சமரகோன் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சகல கட்சிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.