ஸ்பெயின் நாட்டின் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்பு

329 0

ஸ்பெயின் நாட்டின் பிராந்தியங்கள் சுதந்திரத்துக்கான கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான வழிகளை அரசியல் யாப்பில் ஏற்படுத்த ஆலோசிக்கப்படுகிறது.

அந்த  நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அல்ஃபொன்சோ டாஸ்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டலோனியா தன்னாட்சிப் பிராந்தியம் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டலோனியாவானது  ஒருதலைப்பட்சமாக கருத்துக் கணிப்பை நடத்தி, தனிநாடாக அறிவித்துக் கொள்ள முயற்சித்ததாலேயே அதனை தடுத்ததாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

Leave a comment