பிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர், இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் பதவி விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தமது குடும்பத்தாருடன் தனிப்பட்ட விஜயமாக இஷ்ரேல் சென்று, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உள்ளிட்ட இஷ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.