அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான வாத விவாதங்கள் எதிர்வரும் தினங்களிலும் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான வாதம் நேற்றைய தினமும் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, அதிகாரப் பகிர்வு நாட்டுக்கு முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதன்ஊடாகவே அபிவிருத்தியை பரவலாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.