மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை டிசம்பர் மாதம் 31ம் திகதியின் பின்னர் ரத்துச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அது தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் சிறப்பு அறிவிப்பொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக உள்ளதாக அவர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருந்தார்.