கமல்ஹாசன் கட்சி தொடங்க ரசிகர்களிடம் பணம் கேட்பதா?: ஜெயக்குமார்

319 0

கட்சி தொடங்க ரசிகர்களிடம் ரூ.30 கோடி பணம் கேட்ட கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்காக தேவைப்படும் ரூ.30 கோடி பணத்தை ரசிகர்களிடம் திரட்டுவேன் என்றார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அங்கீகாரம் தருவது மக்கள். அவர்கள்தான் இறுதி எஜமானர்கள்.

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பக்கம் மக்கள் உள்ளனர். தலைவர்கள் யாரும் தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை. தொண்டர்களிடம் கமல் ரூ.30 கோடி கேட்கிறார். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. உலகிலேயே கட்சி தொடங்க ரசிகர்களிடம் ரூ.30 கோடி பணம் கேட்டது இவராகத்தான் இருப்பார்.

கனமழை பெய்யும்போது சாலைகளில் மழைநீர் தேங்கும். மழை நின்றதும் தேங்கிய நீர் வடிந்து விடும். சென்னையை பொறுத்த வரை 14 ஆண்டுகளாக சராசரி மழை இருந்தது. 2005-ல் பெருமழை பெய்தது. அதன்பிறகு 2015-ல் பெருமழை பெய்தது.

அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் எதிர்வரும் காலத் தில் என்ன செய்ய வேண்டும் என திட்டம் வகுத்து செயல் படுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment