நல்லாட்சி எனச் சொல்லும் அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப்போல வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு குறைந்தளவு நிதியையே ஒதுக்குகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வரலாறு காணாதவகையில் நல்லாட்சி எனச் சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கென பெருந்தொகையான நிதியை ஒதுக்கீடு செய்து வருகின்றது.
எனினும் இனிவரும் காலங்களிலாவது பாரபட்சமின்றி வரவு செலவுத் திட்டமொன்றை வரையவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.மேலும், முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விடயத்தையும் நாடாளுமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.