அரசியல் அமைப்பு பேரவை கூடவுள்ளது

7055 0

அரசியல் அமைப்பு பேரவை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று முற்பகல் 10.30 அளவில் நாடாளுமன்றில் மீண்டும் கூடவுள்ளது.

புதிய அரசியல் யாப்பு குறித்த வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான 5ஆம் நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில், கடந்த மாதம் 30, 31ஆம் மற்றும் இந்த மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளிலும் விவாதம் இடம்பெற்றிருந்தது.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றுமொரு தினத்தை வழங்க வேண்டும் என, கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கட்சியின் தலைவர்களின் சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதன்பொருட்டே இன்று ஐந்தாவது நாளாகவும் விவாதம் இடம்பெறவுள்ளது.

Leave a comment