மானஸ் தீவு அகதிகளின் வசதிகள் குறித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு

5010 0

மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்கக் கோரி, பப்புவா நியுகினி நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

அகதிகள் சார்பான சட்டத்தரணி பென் லோமி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த முகாம் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு, மின்சார, நீர் மற்றும் உணவு விநியோகம், மருத்துவ சேவைகள் என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன.

அங்குள்ள அகதிகள் 600 பேர் முகாமைவிட்டு வெளியேறு மறுத்து வருகின்றனர்.

அவர்களுக்கான அடிப்படை வசதிகள் நீக்கப்பட்டமையானது, அகதிகளின் உரிமை மீறலாகும் என்று தெரிவித்து, பப்புவா நியுகினி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும் இந்த கோரிக்கையை நேற்று நீதிமன்றம் நிராகரித்தது.

தற்போது மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைத்து மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment