தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மறுசீரமைப்பு செயற்பாடுகள், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைப் பகிரும் வகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் உச்ச நீதிமன்ற விசாரணையாளரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பாதிக்கப்பட்டோருக்கான நம்பிக்கை நிதியத்தின் பணிபாளர் சபைத் தலைவருமான மொட்டு நொகுச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு பொறிமுறைகள் அனைத்து சமுகத்துக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
ஆனால் தற்போது இலங்கையில் நடைபெறுபவை ஒரு சமுகத்தை மாத்திரம் இலக்கு வைத்து இடம்பெறுவதாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து தமது சொந்தக் கருத்து என்றும், ஜப்பானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.