நாட்டின் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான அறிக்கை

3957 0

நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை கையளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அரசாங்கம் முக்கியமான பல தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெற்றோல் பற்றாக்குறை நாளையுடன் தீர்க்கப்படும் என்று, கனியவள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதில் இருந்து நாளை முதல் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு இந்திய ஐ.ஓ.சி நிறுவனமே காரணம் என்ற குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில்16 சதவீதமான எரிபொருள் தேவையையே தாங்கள் பூர்த்தி செய்வதாகவும், இதனால் தங்களால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment