ஆயிரத்து 126 கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு பிரேரணையொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களில் வேதனம் , வௌ்ளப்பெருக்கு நிவாரணம் , அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் வௌிநாட்டு பயணங்களுக்கான நிதிஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் சில இந்த குறைநிரப்பு பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குறை நிரப்பு பிரேரணையில் தொடர்சியான செலவீனங்களுக்காக 634 கோடி ரூபாயும் மற்றும் மூலதன செலவீனங்களுக்காக 492 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.