யாழ்ப்பாணத்தில்  80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை 

14069 146

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும் இல்லை என ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபோதையில் உந்துருளியை செலுத்தியைமை தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச பூசகர் ஒருவர், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைபடுத்தப்பட்டார்.

இதன்போது அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த பிரதேசத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் 80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் இல்லை என ஊர்காவற்றுறை காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெருமளவான உந்துருளி ஓட்டுநர்களுக்கு, சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment