குருணாகலில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா மாநாட்டின் போது கட்சியின் தலைவர் பல கொள்கைகளை வெளியிட்டு விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரலாற்றில் மிகப் பெரிய கூட்டத்தை குருணாகலில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்க போகும் நபர்கள் தமது தலையில் தாமே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போன்ற நிலைமை ஏற்படும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியதுடன் மீண்டும் திரும்பி வர நேரிட்டது.
அனைவருக்கும் கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லை என சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.