தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 40,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனத் தெரிவித்த அவர், இந்த இலக்கானது அடுத்த இரண்டு வருடங்களுக்குள் சாத்தியப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஒரு தொழிலாளி ஆகக் குறைந்தது 300 டொலர் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது எனவும், அந்த நிலை எமது நாட்டிலும் உருவாக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றம் கருதி மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.