வடக்கிலிருக்கும் எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லை.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளும்.
ஒரு இராணுவ முகாம் எவ்வாறு இருக்கும் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினருக்கான நிரந்தரமான தங்குமிட வசதிகளைக் கொண்டது தான் ஒரு இராணுவ முகாமாகும்.
எமது முகாமுக்குத் தேவையான பிரதேசத்தை மாத்திரம் நாம் பராமரிப்போம். ஏனைய பிரதேசங்களை விடுவிப்போம். சரியான இடங்களில்தான் நாங்கள் இராணுவ முகாம்களை அமைப்போம் எனவும் தெரிவித்தார்.