இலங்கையில் இன்னும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்

336 0

61இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இனரீதியான பாகுபாட்டை தவிர்க்கும் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான மீளாய்வின் பின்னர் இந்த கருத்து அண்மையில் வெளியிடப்பட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குழுவின் உறுப்பினரும் இலங்கைக்கான அறிக்கையாளருமான ஜோஸ் பிரான்ஸிஸ்கோ காலி டெசி, இது தொடர்பில் கருத்துறைக்கையில், இலங்கையில் தமிழர்கள், பொதுச்சேவைகளை தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்வது உட்பட்ட விடயங்களில் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள பொலிஸாருக்கு தமிழ் மொழி தெரியவில்லை.

அத்துடன் அங்கு இராணுவ பிரசன்னம் காரணமாக மக்கள் பயத்துடனேயே வாழ்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய நிதிகள் ஒதுக்கப்படவில்லை.

இதன்காரணமாக பாதிக்கப்படும் தமிழ் பெண்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று ஜோஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.