சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பிறசிடன்ட் டொட் கவ் டொட் எல்கே (President.gov.lk) என்ற இணையத்தளத்திற்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) இரவு சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த இணையத்தளத்திற்குள் ஊடுருவிய இணையக் கொள்ளையர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இணையத்தளங்கள் தொடர்பாக சிறீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செந்நிறத்தில் எழுதப்பட்டுள்ள இந்த வாசகங்களுக்கு சிறீலங்கா இளையோர் அமைப்பு உரிமைகோரியுள்ளது.
இது குறித்து சிறீலங்காவின் இணையத் தள தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுவரை தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.