இலங்கையில் 16,000 பேர் காணாமல் போயுள்ளனர் – அரசாங்கம்

374 0

mangala-samaraweera_8இலங்கையில் 16,000 பேர் வரையிலானவர்களே காணாமல் போயுள்ளனர் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக நேற்றையதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் இலங்கையில் 16084 பேர் காணாமல் போயுள்ளனர்.

மக்வெல் பரணகம தனது விசாரணையின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16,000 பேர் எனக் குறிப்பிட்டுள்ளது.

காணாமல்போனவர்களின் தாய்மார்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க தான் நரகத்துக்குப்போகவும் தயார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இதே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் நரகத்துக்கோ, ஜெனீவாவுக்கோ செல்லாமல் அந்தத் தாய்மாரின் கண்ணீருக்கு பதிலொன்றைப் பெற்றுக் கொடுக்க முயற்சி செய்துள்ளோம். இது பெரும் வெற்றியாகும்.

காணால்போனோர் தொடர்பாக அத்தாட்சிப் பத்திரம் ஒன்றை வழங்குவதினூடாக இலங்கையில் இதுவரை காலமும் பல்வேறு குடும்பங்களில் நிலவிய காணிபங்கீடு, திருமண உறவுகள் போன்றவற்றிலான சட்டச்சிக்கல்களை இனி வரும் காலங்களில் இலகுவாகத்தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.