பிணையில் விடுவிக்கப்பட்ட 3 தமிழ் மாணவர்களும் கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் பதிவு

406 0

imageயாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 தமிழ் மாணவர்கள் நண்பகல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
யாழ்.நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே மாணவர்கள் வாக்குமூலங்களை கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 16 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் தமிழ், சிங்கள மாணவ்ரகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினை அடுத்து சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களுக்க எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளுக்காக முதலில் பல்ககை;கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழைக்ககப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் 3 தமிழ் மாணவ்கள் விசாரணைக்காக யாழ்.நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் பணித்திருந்தது.
இதன்படி பிணையில் விடுவிக்கப்பட்ட விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்களும் உடனடியாகவே கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.
அங்கு 3 மாணவர்களும் தனித்தனியாக தாங்கள் மோதல் சம்பவம் இடம்பெற்ற விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் நிழ்வுக்கு எதற்கான சென்றனர் என்றும், மோதலின் போது தமது செயற்பாடுகள் எவ்வாறான இருந்தது என்பது தொடர்பாகவும் தமது வாக்குமூலங்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.