அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதீட்டில் முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை செய்ய வேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
புதிய ஆண்டுக்கான பாதீட்டு யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மக்களின் வாழ்வாதார செலவீனங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சரே இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமானவர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில் கடன் வட்டிவீதமும் 18 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக நாடாளுமனற் உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.