அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை விஜயம்

5872 28

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  அரசியல் விடயங்கள் தொடர்பான உதவிச் செயலாளர் தோமஸ் ஏ செனன் இன்று இலங்கை வருகிறார்.

தற்போது பங்களாதேஷிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

அவர், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்றுவரும் இருதரப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

அத்துடன், அரச மற்றும் தனியார் அரசசார்பற்ற பிரதிநிதிகளுடனும் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment