அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா அவரை எச்சரித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி தம்மை தேவையற்ற வகையில் விமர்சித்து வருவதை வடகொரியா கண்டித்துள்ளது.
அவரின் நடவடிக்கைகள் வடகொரியாவின் ஸ்திர தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்பாடுகள் மூலம் பாரதூரமான அணு ஆயுத தாக்குதல்களை அமெரிக்க நிலப்பரப்பு எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தின் போது, எந்த சர்வாதிகார தன்மையை கொண்ட நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.