பொகவந்தலாவை போனோகோட் தோட்டத்தில் பத்துவயது சிறுமியை தாக்கி துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான குறித்த சிறுமியின் சிற்றன்னை மற்றும் மைத்துனர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நேற்று அவர்கள் இருவரும் பொகவந்தலாவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
சிறுமியின் தாய் வெளிநாட்டிலும், சிறுமியின் தந்தை கொழும்பிலும் பணிப்புரிந்து வரும்நிலையில், கடந்த வருடம் முதல் குறித்த சிறுமி தனது சிற்றன்னையின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார்.
இந்தநிலையில், சிறுமி நேற்று காலையில் சிற்றன்னையினாலும் மைத்துனராலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சிறுமி காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, சிறுமி தற்போது அவரது தந்தையிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.