இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பின் தலைமையிலான குழு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு வழங்க வேண்டிய அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.