பொது மக்களின் பாதுகாப்புக்காக உள்ள பொலிஸ் படையில் உள்ளவர்கள் சட்டங்களை மீறினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
பொலிஸ் நிலையங்களுக்கு இன்னும் 10 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.