சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு

287 0
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுவிஸ்சலாந்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெருமா மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் கைது செய்யப்படுகின்றமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அண்மையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு அமைய நேற்று சுவிஸ்சலாந்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

Leave a comment