பதில் சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இப்பதவிக்கு தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் நீதிபதிகள் குழுவில் பிரதானியாக தப்புல டி லிவேரா செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.