சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இரு வௌிநாட்டவர்கள் கைது!

247 0

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இரு வௌிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்ட வரையறைகளை மீறி, உணவு விடுதியொன்றில் வேலை செய்து கொண்டிருந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment